ஞானசேகரன் வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள இபிஎஸ், திமுக அரசு ஞானசேகரன் வழக்கை நடத்திய லட்சணத்தைப் பார்த்து உயர்நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய நிலையில், தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து இத்தனை குற்றங்கள் அரங்கேறுகிறது என்றால், நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி எனக் குறிப்பிட்டுள்ள அவர், SIR-ஐக் காப்பாற்றும் உங்கள் ஆட்சி சட்ட நீதிக்கும், பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரான ஆட்சி என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் SIR-ம், சாருக்கு பின்னால் உள்ள எல்லா சார்களும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.