அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு!
Apr 19, 2026, 09:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 28, 2025, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால், அவரை குற்றவாளி என அறிவித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சக மாணவருடன் அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், மாணவரை அங்கிருந்து விரட்டி அடித்து விட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த 37 வயதான ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தனர்.

அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் மார்ச் மாதம் முதல் அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கின் விசாரணை தொடங்கியது. காவல்துறை தரப்பில் வக்கீல் எம்.பி.மேரி ஜெயந்தி ஆஜராகி வாதிட்டார். பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ராஜலட்சுமி இன்று அறிவித்தார். முன்னதாக இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது, தனது அப்பா இறந்துவிட்டார் என்றும், அம்மாவையும், சகோதரியையும், மகளையும் கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை தனக்கு உள்ளதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், குற்றவாளி ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், குற்றவாளி ஞானசேகரனுக்கு இரக்கம் காட்டக் கூடாது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவுகள் உள்ளனவா? என்று சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி கேள்வி எழுப்பினார்.

அப்போது, பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமான குற்றம்புரிந்த ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகி உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும், தண்டனை விவரம் வெளியாகும் வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னை மகளிர் நீதிமன்றத்தில் இருந்து ஞானசேகரன் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Tags: Anna University campusGnanasekaran arreststudent sexual assaultgnanasakera culpritchennai fast courtDMKAnna Universitytamilnadu governmentchennai police
ShareTweetSendShare
Previous Post

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர் – இபிஎஸ்

Next Post

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடுமையாக கையாளப்பட வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

Related News

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

பொன்னேரியில் இண்டி கூட்டணி பிச்சார கூட்டம் – ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்த போது கலைந்து சென்ற பொதுமக்கள்!

தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த சிறுத்தைகள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ

பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

உதகையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

குறிஞ்சிப்பாடி அருகே அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பிரச்சாரம் – இளைஞர்கள் வாக்குவாதம்!

திமுகவுக்கு எதிராக பேச்சு – பிரேமலதா மீது ஸ்டாலின் அதிருப்தி என தகவல்!

மகளிர் இடஒதுக்கீடூ மசோதா விவகாரம் நாடு தழுவிய போராட்டம் நடத்த என்டிஏ திட்டம்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது – இசக்கி சுப்பையா

செங்கோட்டையன் திமுக உளவாளி – இபிஎஸ் குற்றச்சாட்டு!

இன்று கோவை வருகிறார் பிரதமர் மோடி – என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை!

அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரை – திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கூறி வாக்கு சேகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies