மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் அலிப்பூர்தூர் பகுதியில், எரிவாயு விநியோக திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், திரிணாமுல் காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக விமர்சித்தார்.
அப்பாவி ஆசிரியர்களின் வாழ்க்கையில் திரிணாமுல் காங்கிரஸ் விளையாடியுள்ளதாக கூறிய அவர், தனது தவறை ஏற்க திரிணாமுல் காங்கிரஸ் தயாராக இல்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் முர்ஷிதாபாத் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும், மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.