மதுரையில் மேம்பால திறப்பு விழாவில் பங்கேற்காமல் மேயர் புறக்கணித்தது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழங்காநத்தம், டிவிஎஸ் நகர், ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாலத்தின் பணிகள் நீண்ட போராட்டத்திற்கு பின் நிறைவடைந்து.
இந்நிலையில் பாலத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், மேயர் இந்திராணி மட்டும் நிகழ்ச்சியை புறக்கணித்தார்.
மேயரின் கணவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் பங்கேற்காதது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.