பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகளை கையாளும் வகையில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாட்னா விமான நிலையத்தின் புதிய முனையம் கட்டப்பட்டது. இந்த புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது அவருடன் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக பாட்னா வருகை தந்த பிரதமர் மோடி, வாகனப் பேரணியில் ஈடுபட்டார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள், மலர் தூவி, பிரதமர் மோடியை வரவேற்றனர்.