பேருந்து கட்டணத்தை உயர்த்தலாம் என்ற திமுக அரசின் கனவு நிறைவேறாது - நயினார் நாகேந்திரன்
Mar 15, 2026, 05:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேருந்து கட்டணத்தை உயர்த்தலாம் என்ற திமுக அரசின் கனவு நிறைவேறாது – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
May 30, 2025, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேருந்துக் கட்டணத்தை உயர்த்தலாம் என்ற திமுக அரசின் கனவு நிறைவேறாது  என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த திமுக அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அரசிடம் தெரிவிக்கலாம் எனவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.

திமுக அரசு தனது அடுத்த நாடகத்தை அரங்கேற்றத் தயாராகிவிட்டது என்பதைத் தான் இச்செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன. பேருந்துக் கட்டண உயர்வு குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யச் சொன்னதும் அதற்காக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படுவதும் சரி தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், மக்களின் விருப்பங்களுக்கும் கருத்துகளுக்கும் இந்த ஆட்சியில் இதுவரை மதிப்பளிக்கப்பட்டுள்ளதா என்பது தான் இங்கே அடிப்படைக் கேள்வி. மக்களின் மனதுப்படி தான் இந்த ஆட்சி நடக்கிறது என்றால் அனைவருக்கும் சமக் கல்வி வழங்கும் தேசியக் கல்வி கொள்கையை திமுக அரசு எப்போதோ ஏற்றுக் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக அரியணை ஏறியது முதல் மின்சாரக்கட்டணம், சொத்துவரி, தொழில்வரி, ஆவின்பால் விலை, முத்திரைக் கட்டணம் என தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் விலைவாசி மற்றும் வரி உயர்வால் விழி பிதுங்கி கிடக்கும் தமிழக மக்கள், தங்கள் அன்றாடப் போக்குவரத்துக்குத் தேவையான பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணத்தை உயர்த்த ஒப்புக் கொள்வார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மழை பெய்தால் உள்ளே அருவி கொட்டுகிறது, காற்றடித்தால் மேற்கூரை தனியே பறந்துவிடுகிறது இப்படிப்பட்ட ஓட்டை உடைசல்களுக்கு பசை போட்டு ஒட்டி “பேருந்து” என்ற பெயரில் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசுப் பேருந்துகளின் தரத்தை உயர்த்தாத திமுக அரசு, அதன் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதை மக்கள் எப்படி அனுமதிப்பார்கள்? என்றும் அவர் வினவியுள்ளார்.

மக்களின் எதிர்ப்புக் குரலுக்கு ஊழலில் ஊறிப் போன இந்த திமுக அரசு செவி சாய்க்குமா என்ன? ஆக, ஆட்சிக் காலம் முடிவதற்குள் மீதமிருக்கும் பேருந்துக் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரைக் கொள்ளையடிக்க திமுக அரசு முடிவு செய்துவிட்டது என்பதும், மக்களிடம் கருத்துக் கேட்பதாகக் கூறி விளம்பரப்படுத்துவதெல்லாம் வெறும் கண் துடைப்பு நாடகம் என்பதும் மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் தோள்களில் மீண்டும் சுமையை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கலாம் என்ற திமுக அரசின் கனவு ஒருநாளும் நிறைவேறாது, அதைத் தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின்
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே, பேருந்துக் கட்டண உயர்வு என்ற எளிய மக்களின் வயிற்றிலடிக்கும் முடிவை அறிவாலய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: bus fares issuehigh courtDMK governmentNational Education PolicyTamil Nadu BJP state president Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

முப்படைகளின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்தது : பிரதமர் மோடி

Next Post

பல மதங்கள் இருந்தாலும், தர்மம் என்றால் அது சனாதன தர்மம் மட்டும்தான் : ஆளுநர் ஆர்.என். ரவி

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies