கொந்தளிக்கும் மக்கள் : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும் விளையாட்டு மைதானம்!
Jul 19, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொந்தளிக்கும் மக்கள் : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும் விளையாட்டு மைதானம்!

Web Desk by Web Desk
May 31, 2025, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவேற்காடு நகராட்சி மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கோலடி கிராமத்தில் பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் தமிழக அரசும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் முயற்சி செய்துவருவதாகப் புகார் எழுந்துள்ளது. விளையாட்டுத்திடலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாக மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கை குறித்தும் மக்களின் எதிர்ப்பு குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திருவேற்காடு நகராட்சியில் எந்த ஒரு முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும் என்றாலும் அவர்கள் நாடக்கூடிய ஒரே மைதானம் இந்த கோலடி மைதானம் தான். எண்ணற்ற விளையாட்டு வீரர்களை உருவாக்கிய அத்தகைய விளையாட்டு மைதானத்தைக் கையகப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை, கடும் எதிர்ப்பை மீறியும் அங்குக் கழிவுநீர் சுத்திகரித்து நிலையத்தை அமைக்க முயற்சிப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 ஏக்கர் பரப்பளவில் ஏராளமான விளையாட்டு வீரர்களை உருவாக்கிய இந்த மைதானத்திற்குள் தற்போது யாரும் நுழைய முடியாத அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.  இதே விளையாட்டு மைதானத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முயன்ற போது எதிர்க்கட்சியாக இருந்து எதிர்ப்பு தெரிவித்த திமுக, ஆளுங்கட்சியான பின்பு அதனை அமைத்தே தீருவோம் என்ற பிடிவாதத்துடன் செயல்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பட்டியலின மக்கள் அதிகளவு வசிக்கும்  இப்பகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் எதையும் கொண்டுவராத திமுக அரசு, அதற்கு மாறாக அவர்கள் வசிக்கும் பகுதியில் திட்டமிட்டு இதுபோன்ற உடல்நிலைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் திட்டங்களை ஊருக்கு நடுவில் கொண்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மைதானத்திற்கு ஒருபுறம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளியும், மறுபுறம் திருவேற்காடு நகராட்சியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோலடி ஏரியும் அமைந்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்லாமல் நிலத்தடி நீருக்கும் ஆபத்து விளைவிக்கும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடினால், காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்வதாகவும் பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊரின் நடுப்பகுதியில் திமுக அரசு கொண்டுவர முயற்சிப்பதின் பின்னணி அப்பகுதி மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Angry people: The playground is a sewage treatment plantவிளையாட்டு மைதானம்கொந்தளிக்கும் மக்கள்திருவேற்காடு நகராட்சிதமிழக அரசு
ShareTweetSendShare
Previous Post

ஸ்டார்ஷிப் சோதனை தோல்வி : கேள்விக்குறியான செவ்வாய் கிரக பயண திட்டம்!

Next Post

இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2047-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும் – சிஐஐ, கேபிம்ஜி

Related News

வான்வழி போரை வசமாக்கும் இந்தியா : சீனா, அமெரிக்காவை மிஞ்சும் காண்டீபம் ஏவுகணை!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – பாஜக சார்பில் ரத்த தான முகாம்!

சர்ச்சை பேச்சின் பின்னணி – காங்கிரஸை கை கழுவ திமுக திட்டமா?

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சிறுமுகை அருகே இயந்திர படகு போக்குவரத்து தொடக்கம்!

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமைக்காவலர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – இபிஎஸ் உறுதி!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா!

அரசு கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

ஈ.வெ.ரா. பெயரில் கட்டப்பட்டு வரும் நூலக நுழைவு வாயிலில் திருஷ்டி படம்!

கும்மிடிப்பூண்டி அருகே 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – உருவ படத்திற்கு நயினார் நாகேந்திரன் மரியாதை!

மயிலாடுதுறை காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

வேலூரில் இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே மோதல்!

மயிலாடுதுறையில் மதுவிலக்கு DSP விவகாரம் – முதல்வர் தலையிட அண்ணாமலை வலியுறுத்தல்!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு திமுக அரசின் பதில் என்ன? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies