சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டிக்கு இந்திய மதிப்பில் 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தோ பாயோ பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷியாமலா என்பவர் வசித்து வருகிறார். புறாக்களுக்கு அவர் உணவு வழங்கி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சிங்கப்பூரில், பறவை, விலங்குகளுக்கு வனவிலங்கு மேலாண்மைத் துறையிடம் இருந்து உரிய அனுமதி பெற்று உணவளிக்க வேண்டும் என அந்நாட்டுச் சட்டம் கூறுவதால் ஷியாமலாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.