சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் : நிதி வழங்குவதை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை!
Oct 17, 2026, 02:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் : நிதி வழங்குவதை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை!

Murugesan M by Murugesan M
Jun 2, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானின் பயங்கரவாத நிதி நடவடிக்கைகள் குறித்து ஆதாரங்களைச் சேகரித்துள்ள இந்தியா, நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) கூட்டத்தில் அவற்றைச் சமர்ப்பித்து மீண்டும் பாகிஸ்தானைச் சாம்பல் பட்டியலில் சேர்க்க  வலியுறுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சர்வதேச  நிதி ஆணையத்திடமிருந்து, நிதி உதவி பெற்ற ஆண்டுகளில், பாகிஸ்தான் தனது ஆயுத இறக்குமதியை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு மார் 18 சதவீதத்தைச்  செலவழித்து வருகிறது. இதுவே பாகிஸ்தான், IMF நிதி உதவியைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்பதற்கான சான்றுகள் ஆகும்.

பாகிஸ்தான் அரசுக்கான வருமானம் வரியிலிருந்து வரவில்லை- அந்நிய கடன்களிலிருந்து வருகிறது எனத் தரவுகள் காட்டுகின்றன. 2018ம் ஆண்டில்  பாகிஸ்தான் FATF  சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கும் நிதி மோசடிக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பாகிஸ்தான் முறையிட்டது. இதைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு இறுதிக்குள் 34 அம்ச செயல்திட்டத்தைச் செயல்படுத்துமாறு FATF பாகிஸ்தானை  வலியுறுத்தியது.

தொடர்ந்து கோவிட் காரணமாக இந்தக் காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட்டது. 2020 முதல் 2022 வரை,  நிதி மோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கான நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் மேற்கொண்டது. செயல் திட்டத்தின் நிறைவை உறுதிப்படுத்த  2022ம் ஆண்டு செப்டம்பரில் நேரடியாகப் பாகிஸ்தானுக்குச்  சென்று, FATF குழு விசாரணை செய்தது. தொடர்ந்து 2022ம் ஆண்டு அக்டோபரில் சாம்பல் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது.

அப்போதே, இந்தியா, பயங்கரவாதத்துக்குத் துணை போகும் பாகிஸ்தானை நீக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தது. இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர்  நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா துல்லியமான ராணுவத் தாக்குதலை நடத்தியது.

ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள்  மூலம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது.  மேலும் பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரேடார், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை இந்தியா தாக்கி அழித்தது.

பாகிஸ்தான் அரசு கெஞ்சிக் கேட்டதற்குப் பின், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிராக ZERO TOLERANCE  என்ற இந்தியாவின் கொள்கைக்குச் சர்வதேச அளவில் ஆதரவு திரட்டவும், ஆப்ரேஷன் சிந்தூர பற்றியும், பயங்கரவாத பாகிஸ்தானைத் தனிமைப் படுத்தவும்  அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை 32 நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வைத்தது.

பாகிஸ்தானுக்கும் பயங்கர வாதத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய தெளிவான ஆதாரங்களை  எடுத்துரைத்த AIMIM கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசி, பாகிஸ்தானில் ஃபீல்ட் மார்ஷலாக ஆக அசிம் முனீர் நியமிக்கப்பட்டபோது, ​​அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட பயங்கரவாதி முகமது எஹ்சான் ஃபீல்ட் மார்ஷலுக்கு அருகில் அமர்ந்திருக்கும் புகைப் படத்தையும்  எடுத்துக் காட்டினார்.

பயங்கரவாதிகளுக்குப்  பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்படுகிறது, மேலும் இந்தியாவில் இந்து முஸ்லிம் கலவரங்களை உருவாக்கி  இந்தியாவைச் சீர்குலைப்பதே பாகிஸ்தானின் முழு நேர பணியாகும். அதற்காகவே  பயங்கரவாத அமைப்புகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் உதவி வருகிறது

எனவே,பாகிஸ்தானை FATF சாம்பல் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய  ஓவைசி, சவூதி அரேபியாவிலிருந்து கணிசமான நிதி உதவியைப் பாகிஸ்தான் பெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 2 பில்லியன் டாலர் நிதியுதவியும், சுமார் 3 பில்லியன் டாலர் கடனும் சவூதி அரேபியா பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. இருந்த போதிலும், பாகிஸ்தானின் பொருளாதாரம் நிலையாக இல்லை. அந்த நிதி  ஏழைகளின் நலனுக்காகப் பயன்படுத்தப் படவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பின்னர்  பாகிஸ்தானுக்கு  8,000 கோடி ரூபாய்க்கு மேல் தவணை நிதியை IMF விடுவித்துள்ளது. இந்திய மக்களுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தப் பயங்கரவாதிகளுக்குத்  தனது மண்ணைப் பயன்படுத்த அனுமதிப்பதால், பாகிஸ்தானுக்குக் கொடுத்த தவணை நிதியை  மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியா IMF கேட்டுக் கொண்டது.

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் உதவி “பயங்கரவாதத்துக்கு  மறைமுக நிதியளிப்பு” என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். பயங்கர வாத பாகிஸ்தானை FATF சாம்பல் பட்டியலில் சேர்க்க அனைத்து வகையிலும் இந்தியா முயற்சி செய்து வருகிறது.அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: இந்தியா நடவடிக்கைIndiapakistanPakistan on grey list: India steps in to stop fundingசாம்பல் பட்டியலில் பாகிஸ்தான்
Share
Tweet
SendShare
Previous Post

அமைச்சர் தா. மோ. அன்பரசன், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்ப்பது மாணவர்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும் : அண்ணாமலை

Next Post

வேதாந்த ஆச்சார்யா Vs ஐஐடி பாபா : வேத ஞானத்தை பரப்பும் இரண்டு பொறியாளர்கள்!

Related News

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies