மேலூர் அருகே பாரம்பரிய முறைப்படி நடந்த மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள சருகுவலையபட்டி வீரகாளியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட அடைக்கன் கண்மாயில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார கிராமங்களான வடக்குவளையபட்டி, அரியூர்பட்டி, தனியாமங்கலம் கீழையூர், கீழவளவு வெள்ளலூர், உறங்கான்பட்டி கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது, கிராம மக்கள் பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களான கச்சா, ஊத்தா ஆகியவற்றை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர்.