சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் 16-வது கண் மதகு பாலத்தை நேரில் ஆய்வு செய்த நீர்வளத்துறை அதிகாரிகள், பணிகளைத் துரித கதியில் மேற்கொள்ள உரிய அறிவுறுத்தல்களை வழங்கினர்.
மேட்டூர் அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதன் 16-வது கண் மதகு பாலத்தை வலுப்படுத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சென்னை நீர் ஆய்வு நிறுவனம் மற்றும் நீரியியல் தரக்கட்டுப்பாடு தலைமை பொறியாளர் சுந்தர் ராஜன் தலைமையில் நீர்வளத்துறை அதிகாரிகள் அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
















