இந்தியாவில் மீண்டும் கொரொனா : புதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை - மருத்துவர்கள்!
Sep 7, 2025, 04:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் மீண்டும் கொரொனா : புதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை – மருத்துவர்கள்!

Web Desk by Web Desk
Jun 4, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் கோவிட்-19 தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்த கொரொனா வைரஸ் மிகவும் கடுமையானது அல்ல என்று கூறும் மருத்துவர்கள், அதற்காகப் புதிதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2019ம் ஆண்டு உலகையே புரட்டி போட்ட கோவிட் -19 வைரஸ், அதன் பிறகு புதுப்புது வடிவங்களில் இன்னமும் மக்களைப் பயமுறுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம், உலக அளவில் SARS-CoV-2 வகை தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. மேலும், தென்கிழக்கு ஆசியா ,மத்திய தரைக் கடல் மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் இந்த புதிய வகை நோய்த் தொற்று பரவல் அதிகமாகக் காணப் படுவதாகவும் கூறியிருந்தது.

கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம்  என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியிருந்தது. இதுவரை கேரளாவில் தான் அதிகமானோர் கொரொனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கேரளாவில் கொரொனாவால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 1,435 ஆகும். அடுத்தப் படியாக ,மகாராஷ்டிராவில் 506 பேரும், குஜராத்தில் 338 பேரும்,டெல்லியில் 483 பேரும், கர்னாடகாவில் 253 பேரும்,தமிழகத்தில் 189 பேரும் கொரொனா தொற்றுக்குச்  சிகிச்சை எடுத்து  வருகின்றனர்.

இந்நிலையில், ஒரே நாளில் அதிகப் பட்சமாக குஜராத்தில் புதிதாக 59 பேர் கொரொனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதற்கடுத்த படியாகக் கர்நாடகத்தில்  58 பேரும், மேற்குவங்கத்தில் 41 பேரும், தமிழகத்தில் 26 பேரும், கொரொனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

நாட்டில் 4026 பேர் கொரொனா  பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், கொரோனாவின்  NB.1.8.1, JN.1 LF.7, XFG ஆகிய ஒமிக்ரான் வகை வைரஸ்களே இப்போதைய பரவலுக்கு முக்கியக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. தற்போது பரவும் கொரொனா வைரஸ் மிகவும் கடுமையானது அல்ல என்று கூறும் மருத்துவர்கள், அதற்காகப் புதிதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே கொரொனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட காரணத்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகவே இருக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான மக்கள்  கொரொனா வைரஸுக்கு எதிரான நோய் சக்தியுடன் உள்ளதாகவும்  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாகவே, தடுப்பூசி மருந்தின் வீரியம் குறைந்துவிட்டாலும், குறிப்பிட்ட  வைரஸை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பதைத் தடுப்பூசி போடப்பட்ட உடல் மறக்காது என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ள நிலையில், முக கவசம் அணிவது போன்ற அடிப்படை பாதுகாப்பு பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவது நல்லது என்று பரிந்துரைத்துள்ளனர்.

சளி,  இருமல், தொண்டை வலி, மூச்சுத் திணறல், தலைவலி, உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் முகக் கவசம் அணிந்து கொள்ளச் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் கொரோனா பரவல் குறித்த அச்சம் தேவையில்லை என்று   மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் கூறியுள்ளார்.

Tags: Corona again in India: No need for a new booster vaccine - Doctorsபுதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லைஇந்தியாவில் மீண்டும் கொரொனா
ShareTweetSendShare
Previous Post

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

Next Post

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

Related News

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

கயானா தேர்தலில் வெற்றி – அதிபர் இர்ஃபான் அலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உத்தரகாசியில் மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை – கரைபுரண்டு ஓடிய வெள்ளம்!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – இறுதிசுற்றில் இந்தியா!

தெலங்கானா ஆளுநருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு – மாநில நலன் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்!

வடமாநிலங்களில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – ஆடிப்பாடி உற்சாக கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது காவலர் தாக்குதல் – இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

தொடர் விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்த வருமான வரி சோதனை – பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

ஆவணி மாத பவுர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

அடுத்த மாதம் சீன அதிபரை சந்திக்க ட்ரம்ப் திட்டம் – வெள்ளை மாளிகை தகவல்!

சந்திர கிரகணம் – வடபழனி முருகன் கோயில் நடை இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies