தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகளை கோட்டை விடும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகளை கோட்டை விடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 5, 2025, 08:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்திற்கு வர வேண்டியா முதலீடுகளை  திமுக அரசு கோட்டை விடுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், , தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தராமல் பல கோடிக்கணக்கான முதலீடுகளையும், பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் பிற மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்  தமிழகத்திற்கு வர வேண்டிய ஃபாக்ஸ்கான், HCL நிறுவனங்களின் சுமார் ₹3,700 கோடி மதிப்பிலான முதலீடுகளும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு கைமாறி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த ஏமாற்றமளிப்பதோடு, ஆளும் அறிவாலய அரசின் நிர்வாக லட்சணம் என்ன என்பதையும் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என அவர் கூறியுள்ளார்.

ஆனால் கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் நெய்க்கு அலையும் கதையாக, தமிழகத்திற்கு தானாகக் கிடைக்கும் முதலீடுகளைத் தக்க வைப்பதில் கவனம் செலுத்த வேண்டிய ஸ்டாலின் அவர்களோ. “முதலீடுகளை ஈர்க்கிறேன்” என்ற பெயரில் வருடாவருடம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று மக்கள் பணத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

“புலி வருது, புலி வருது” என்ற கதையாக திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நான்காண்டுகளில் தமிழகத்திற்கு கிடைத்த முதலீடுகள் எல்லாம் வெறும் வாய் வார்த்தைகளில் மட்டுமே, அது குறித்த வெள்ளையறிக்கையை வெளியிடச் சொன்னாலோ அல்லது ஆண்டுக்கு 10 லட்சம் வீதம் ஐந்தாண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற திமுக-வின் தேர்தல் வாக்குறுதி (எண் 185) என்னவாயிற்று எனக் கேள்வி கேட்டாலோ முதல்வரிடம் பதிலில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அபார ஆற்றலும், அசாத்திய திறமைகளையும் கொண்ட நமது தமிழக இளைஞர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்புகளையும், வளமான எதிர்காலத்தையும் அமைத்துத் தராமல் தங்கள் மோசடிகளை மூடி மறைப்பதிலேயே முழுக் கவனம் செலுத்திவரும் தமிழக முதல்வரும் அவரது அமைச்சர்களும் அரசுப் பதவி வகிக்க துளியும் தகுதியற்றவர்கள் என அவர் கூறியுள்ளார்.

நமது இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தொடர்ந்து தகர்த்து வரும் இந்த ஊழல் ஆட்சிக்கு வரும் 2026-இல் முடிவு கட்டப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: multinational companiesTamil NaduTamil Nadu Chief MinisterTamil Nadu BJP state president Nainar NagendranDMK government of blocking investments
ShareTweetSendShare
Previous Post

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி  11 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு முதல்வர் சித்தராமையா பொறுப்பேற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Next Post

ஆப்கானிஸ்தான், ஈரான், பர்மா 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள தடை – டிரம்ப் உத்தரவு!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies