அசாமில் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. தலைநகரான கவுகாத்தியில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.