மரக்காணம் கலவர வழக்கு - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Sep 27, 2026, 11:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மரக்காணம் கலவர வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jun 5, 2025, 02:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மரக்காணம் கலவரத்தில் ஏற்பட்ட இழப்பை பா.ம.க.விடம் இருந்து வசூலிப்பது தொடர்பான விசாரணையை 8  வாரங்களில் நடத்தி முடிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச்  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாமல்லபுரத்தில், கடந்த 2013ல் வன்னியர் சங்கத்தினர் நடத்திய சித்திரைத் திருவிழாவின்போது, மரக்காணத்தில் ஏற்பட்ட  கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் தீவைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை பா.ம.க.விடம் வசூலிப்பது தொடர்பாக, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணை, தமிழ்நாடு பொதுச் சொத்து சேதம் தடுப்பு சட்டத்தைப் பின்பற்றி நடத்தப்படவில்லை எனவும் இறுதி உத்தரவு பிறப்பிக்கத் தடை கோரியும் பா.ம.க. கவுரவத் தலைவர்   ஜி.கே.மணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

சட்ட விதிகளைப் பின்பற்றி விசாரணை நடத்தாததால் இழப்பீடு கோரி டாஸ்மாக் நிர்வாகம், போக்குவரத்துக் கழகங்கள் அளித்த விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த நிலையில்,  அச்சத்தின் அடிப்படையில், வருவாய் நிர்வாக ஆணையரின் விசாரணையைத் தடுக்கும் நோக்கில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், சட்ட விதிகளின்படியும் விசாரணை நடத்தப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, உயர்நீதிமன்ற உத்தரவின்படி விசாரணையை நடத்தி, 8 வாரங்களில் இறுதி உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Tags: Madras High Court orders Tamil Nadu government!Marakkanam riot case - Order to the Tamil Nadu government
Share
Tweet
SendShare
Previous Post

அசாமில் கனமழை : சாலையில் தேங்கிய தண்ணீர் – வாகன ஓட்டிகள் அவதி!

Next Post

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த ரவுடியின் மனைவி!

Related News

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

புரட்டாசி மாத சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் அரங்கநாதர் உள்ளிட்ட கோயில்களில் அலைமோதிய பக்தர் கூட்டம்!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!

ஆசிய விளையாட்டு போட்டி – கபடியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பாஸ் விற்பனையில் முறைகேடு – வினோஜ் பி.செல்வம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies