பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு!
Oct 26, 2025, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jun 6, 2025, 06:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரம் தொடர்பாக  அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விழாவின்போது ஆயிரத்து 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாகவும், எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் கர்நாடக அரசு விளக்கம் அளித்தது.

மேலும், வெற்றி விழாவில் பங்கேற்க அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டதால் இரண்டரை லட்சம் பேர் மைதானத்தில் திரண்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் வழக்கின் விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனிடையே இந்த விவகாரத்தில் ஆர்.சி.பி. நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த DNA எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மீதும் பெங்களூரு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதற்கிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு ஆர்.சி.பி. அணி தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான எக்ஸ் தளப் பதிவில், பெங்களூருவில் நேற்று நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ரசிகர்களுக்கு உதவ RCB கேர்ஸ் என்ற நிதி திரட்டும் அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஆர்.சி.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Bengaluru City Police Commissionerkarnataka high courtchief Minister SiddaramaiahChinnaswamy StadiumBengaluru stampedeRCB team
ShareTweetSendShare
Previous Post

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – காவல் ஆணையர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட்!

Next Post

கோயில் திருவிழா தொடர்பான சர்ச்சை பேச்சு – அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை கண்டனம்!

Related News

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

10 நாட்களுக்கு பின்னர் குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

நாகர்கோவில் : சேதப்படுத்தப்பட்ட எம்ஜிஆர் சிலை – அதிமுகவினர் போராட்டம்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்து!

விருதுநகர் : காணாமல் போன இளைஞர் கண்மாயில் சடலமாக மீட்பு!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies