ரஃபேல் போர் விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க, பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், டாடா நிறுவனமும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது.
விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களின் தேவை முக்கியமாக மாறியுள்ளது.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.