சென்னை திருப்போரூர் முருகன் கோயிலில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால் கூட்டம் அலைமோதியது.
இன்று சுப முகூர்த்த நாள் என்பதால் திருப்போரூர் முருகன் கோயிலில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் திருமணத்திற்கு வருகை தந்தவர்களும் நடந்து செல்வதற்கே இடம் இல்லாமல் அவதிப்படும் சூழல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் மற்றும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.