நடப்பாண்டு ஹஜ் புனித பயணத்தில் பங்கேற்பதற்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் சவூதி அரேபியாவில் குவிந்துள்ளனர்.
ஹஜ் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காஸான்-அல்-நுவைமி இந்த தகவலைத் தெரிவித்தார். எனினும் உள்நாட்டுப் பயணிகள் குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.
கடந்த 2024-ம் ஆண்டில் 16 லட்சத்து 11 ஆயிரத்து 310 வெளிநாட்டினர் புனிதப் பயணத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.