ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, சுமார் 50 யானைகளைக் கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
சுமார் 800 யானைகள் வசிக்க வேண்டிய இடத்தில் 2,550 யானைகள் வசிப்பதால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யானைகளிலிருந்து வெட்டப்படும் தந்தங்களை ஜிப்பாப்வே அரசு பாதுகாக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. உணவுக்காக யானைகளை வேட்டையாடும் நடவடிக்கையால் உலகளவில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.