சுகாதார சீர்கேட்டின் உச்சம் : நோய்களை உருவாக்கும் கோயம்பேடு சந்தை!
Nov 5, 2025, 07:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுகாதார சீர்கேட்டின் உச்சம் : நோய்களை உருவாக்கும் கோயம்பேடு சந்தை!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கோயம்பேடு சந்தையில் குவிந்து கிடக்கும் அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோயம்பேடு சந்தையில் கொட்டப்படும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்று தான் இந்த கோயம்பேடு காய், கனி மற்றும் மலர் அங்காடி. சென்னை மட்டுமல்ல அதன் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த சிறு,குறு வணிகர்களின் வியாபாரச் சந்தையாகவும் இந்த கோயம்பேடு சந்தை விளங்கி வருகிறது.

295 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த கோயம்பேடு சந்தையில் சுமார் 4 ஆயிரம் கடைகள் இயங்கி வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு சுமார் 35 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாகவும் திகழ்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த சந்தையில் கொட்டப்பட்டிருக்கும் அழுகிய பழங்களும், காய்கறிகளும் சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

விற்பனையாகாத பழங்களும், காய்கறிகளும் அழுகிய நிலையில் கோயம்பேடு வளாகத்திற்குள்ளாகவே கொட்டப்படுவதால் அதிகளவு துர்நாற்றம் வீசுவதோடு, அதன் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாகக் கருதப்படும் கோயம்பேடு சந்தையில் நிலவும் இந்த சுகாதார சீர்கேடு, அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் சுகாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொட்டுவதற்குத் தனி இடம் ஒதுக்குவதோடு, அவ்வாறு கொட்டப்படும் பழங்களையும், காய்கறிகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற வியாபாரிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. சுகாதார சீர்கேடுகள் நிறைந்த கோயம்பேடு சந்தைக்கு வருவதற்கே பொதுமக்கள் அச்சப்படும் அளவிற்கான சூழலும் ஏற்பட்டுள்ளது.

நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கோயம்பேடு சந்தையை முறையாகப் பராமரிக்கத் தவறிவிட்டதாக சிஎம்டிஏ நிர்வாகத்தின் மீது புகார் எழுந்திருக்கிறது. தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று ஒருபுறம் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் கோயம்பேடு சந்தையில் கொசுக்களால் உருவாகும் டெங்கு, மலேரியா காய்ச்சல் ஏற்படும் அசாதாரண சூழலும் உருவாகியுள்ளது.

எனவே பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை சிஎம்டிஏ நிர்வாகமும் தமிழக அரசும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது.

Tags: The height of health deterioration: Koyambedu market that causes diseasesகோயம்பேடு சந்தைசென்னை கோயம்பேடு சந்தை
ShareTweetSendShare
Previous Post

தாம்பரத்தில் பாலியல் அத்துமீறல் நடந்த அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடு : காவல்துறை

Next Post

சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சி : மத்திய அரசின் தொழில்நுட்ப மையங்களுக்கு வரவேற்பு!

Related News

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

திமுகவிற்கு சார் என்றாலும் பயம், S.I.R என்றாலும் பயம் – வினோஜ் பி செல்வம்

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்!

கோவையில் பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவி மீதே பழி சுமத்தும் திமுக கூட்டணி கட்சி தலைவர் – அண்ணாமலை கண்டனம்!

டிஜிபி பதவி உயர்வு பட்டியல் விவகாரம் – தமிழக அரசின் பதிலை ஏற்க யுபிஎஸ்சி மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் நடைபெற்றது – மாதம்பட்டி ரங்கராஜ்

தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது- உத்தராகண்ட் முதல்வர் புகழாரம்!

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் – ஆற்காட்டில் விழிப்புணர்வு பேரணி!

ஐப்பசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஏற்காடு அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை – பெற்றோர் புகார்!

நாமக்கல் அருகே விவசாயிகளுடன் கலந்துரையாடல் – குறைகளை கேட்டறிந்தார் நயினார் நாகேந்திரன்!

மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

ஏமாற்றும் திமுக மாடலுக்குத் தமிழக மகளிர் ஏமாற்றத்தையே பரிசளிப்பர் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies