விமான விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள்!
Jan 14, 2026, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விமான விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள்!

Murugesan M by Murugesan M
Jun 13, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமான விபத்துகளில் உயிரிழந்த இந்தியாவின் பிரபல ஆளுமைகள் பற்றிய ஒரு தொகுப்பை தற்போது காணலாம்.

கடந்த 1963-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், ஆய்வுக்காக ஹெலிகாப்டரில் சென்ற ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் தௌலத் சிங், லெப்டினன்ட் ஜென்ரல் பிக்ரம் சிங், ஏர் வைஸ் மார்ஷல் பிண்டோ உட்பட 6 இந்திய பாதுகாப்புப்படை அதிகாரிகள் உயிரிழந்தனர்.

கடந்த 1966-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி, ஸ்விஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடர்களில் உள்ள மௌண்ட் பிளாங்கில் ஏர் இந்தியா 101 விமானம் மோதி ஏற்பட்ட விபத்தில், அதில் பயணம் மேற்கொண்ட இந்தியாவின் முன்னோடி அணு இயற்பியலாளர் ஹோமி ஜஹாங்கீர் பாபா உயிரிழந்தார்.

கடந்த 1973-ம் ஆண்டு மே 31-ம் தேதி, டெல்லியில் இந்தியன் ஏர்லைன்ஸ் 440 விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் பயணித்த முன்னாள் மக்களவை உறுப்பினர் சுரேந்திர மோகன் குமாரமங்கலம் உயிரிழந்தார்.

கடந்த 1980-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி, டெல்லியில் விமான சாகசத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கோர விபத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபரும், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகனுமான சஞ்சய் காந்தி உயிரிழந்தார்.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், மோசமான வானிலை காரணமாகத் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த முன்னாள் ரயில்வே அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியா உயிரிழந்தார்.

கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி, ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பெல் 206 ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில், மக்களவையின் 12வது சபாநாயகரான ஜி.எம்.சி.பாலயோகி மரணமடைந்தார்.

கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கரீம் நகருக்கு, தனது சகோதரருடன் பயணம் மேற்கொண்ட தென்னிந்திய நடிகை சௌந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு மார்ச் மாதம், உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், ஹரியானா முன்னாள் மின்துறை அமைச்சர் ஓ.பி.ஜிண்டால் மற்றும் முன்னாள் வேளாண் அமைச்சர் சுரேந்தர் சிங் ஆகியோர் பலியாகினர்.

கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, நல்லமலா வனப்பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி, அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முன்னாள் முதலமைச்சர் டோர்ஜி காண்டு மரணமடைந்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி, தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில், இந்திய முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 11 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

2025 ஜூன் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.

Tags: இந்தியாவிமான விபத்துCelebrities who died in plane crashesஉயிரிழந்த பிரபலங்கள்
ShareTweetSendShare
Previous Post

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

Next Post

இந்தியாவை உலுக்கிய கோர விமான விபத்துகள்(1975-2025)!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies