மனைவியை கொல்ல சதி : துபாயில் இருந்து கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்ட முயற்சி!
Jan 14, 2026, 06:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மனைவியை கொல்ல சதி : துபாயில் இருந்து கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்ட முயற்சி!

Murugesan M by Murugesan M
Jun 13, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இருக்கும் தனது மனைவியைத் துபாயில் இருந்தபடியே கூலிப்படையை ஏவி கணவன் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நாட்களாகத் திட்டமிட்டு நண்பர்களையே கூலிப்படையாக ஏவி மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்ட கணவர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை சூளைமேடு பஜனை கோயில் தெருவில் வசித்து வரும் பெனாசீர் பேகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவர் உசேன் தனியாக துபாயில் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெனாசீர் பேகம் கடந்த இரண்டாம் தேதி சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்த போது அவரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் தப்பியோடியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த பெனாசிர் பேகம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெனாசீர் அளித்த புகாரின் படி கொலை முயற்சி மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சூளைமேடு காவல்நிலைய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தனிப்படைகள் அமைத்துத் தேடப்பட்ட நிலையில், பட்டுக்கோட்டையில் பதுங்கியிருந்த குற்றவாளிகளைக் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து துபாயில் வசிக்கும் உசேனின் நண்பர்கள் தான் பெனாசீரை தாக்கியிருப்பது காவல்துறை நடத்திய விசாரணையில் உறுதியாகியுள்ளது. துபாயில் இருந்தபடியே தஞ்சாவூரைச் சேர்ந்த தனது நண்பர்களை வைத்து பெனாசீரை தாக்கக் கடந்த ஒரு மாதமாகத் திட்டமிட்டதாகவும், அதற்காகப் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தனது நண்பர்களுக்கே 30 ஆயிரம் பணம் கொடுத்து அவர்களைக் கூலிப்படையாகப் பயன்படுத்தி  பெனாசீர் பேகத்தின் மீது தாக்குதல் நடத்த உசேன் திட்டமிட்டதும் கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரை காவல்துறை தேடி வருகிறது.

பெனாசீர் பேகத்தின் தந்தை மீதும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதே பாணியில் தாக்குதல் நடைபெற்றிருக்கும் நிலையில் அதற்கும் உசேனுக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரே தன்னுடைய மனைவியைக் கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Plot to kill wife: Attempt to solve it using mercenaries from Dubaiமனைவியை கொல்ல சதிகூலிப்படை மூலம் தீர்த்துக்கட்ட முயற்சிசென்னை சூளைமேடு
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவை உலுக்கிய கோர விமான விபத்துகள்(1975-2025)!

Next Post

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் – கோவையில் தயாரித்து சாதனை!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies