இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் - கோவையில் தயாரித்து சாதனை!
Sep 12, 2026, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் – கோவையில் தயாரித்து சாதனை!

Murugesan M by Murugesan M
Jun 13, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவக் குணமிக்க கார்டிசெப்ஸ் காளான் வகைகளைக் கோவையில் தயாரித்து இரண்டு பேராசிரியர்கள் சாதனை படைத்துள்ளனர். மத்திய அரசின் நிதியுதவியோடு தயாரிக்கப்பட்ட மருத்துவ குணமிக்க காளான் வகைகள் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் உந்துசக்தியாக அமைந்துள்ளன.

காளான் என்பது இயற்கையாக மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சை தாவர வகையாகும். உலக அளவில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வகையிலான காளான் வகைகள் காணப்படும் நிலையில் அதில் 2 ஆயிரம் வகை காளான்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தையும், மனித உடலுக்கு முழுமையான சத்துக்களையும் வழங்குவதோடு மருத்துவத்துறையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படிப்பட்ட மருத்துவக் குணம் நிறைந்த காளான்களில் ஒன்று தான் இந்த கார்டிசெப்ஸ் வகை காளான்.

இமயமலையின் உயரமான பகுதிகளில் உள்ள அந்துப்பூச்சி, கம்பளிப்பூச்சிகளில் மட்டுமே ஒட்டுண்ணியாக வளரும் இந்த கார்டிசெப்ஸ் காளான்களின் மருத்துவப் பயன்பாடு, அவற்றைச் சர்வதேச அளவில் பெரிய  அளவில் பிரபலப்படுத்தியுள்ளது.  அத்தகைய சிறப்புமிக்க காளான் வகைகளை தற்போது கோவையிலும் கிடைக்கும் வகையில் தனியார் கல்லூரியில் பணியாற்றும் இரண்டு பேராசிரியர்கள் இணைந்து இந்த கார்டிசெப்ஸ் காளான் உற்பத்தி மையத்தினை அமைத்துள்ளனர்.

மத்திய அரசின் மூலம் கிடைத்த நிதியுதவியைப் பயன்படுத்தி இம்மலைப்பகுதியில் கிடைக்கும் காளான்களின் மூலக்கூறுகளைச் செயற்கையாகத் தயாரித்து கார்டிசெப்ஸ் காளான் வகைகளை வளர்க்கும் முறை வர்த்தக ரீதியிலும் வெற்றி அடைந்துள்ளது.  பிரத்யேக குளிர் அறையை ஏற்படுத்தி அதில் செயற்கை முறையில் உருவாக்கப்படும் இவ்வகை காளான்கள் பவுடர் வடிவில் மாற்றப்பட்டு தேநீர் மற்றும் சூப்பில் கலந்து அருந்துவதற்கு ஏற்றவகையில் தயாரிக்கப்படுகின்றன. சோர்வு மற்றும் பலவீனத்தைப் போக்கி உடல் ஆற்றலை அதிகரிக்க உதவும் இந்த காளான் உற்பத்தி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இதயத்தைப் பாதுகாப்பதற்கும் சிறந்த அருமருந்தாகத் திகழும் கார்டிசெப்ஸ் வகை காளான்கள், காசநோய், நரம்புக் கோளாறு, நீரழிவு நோய் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் இந்த காளான் வளர்ப்பு முயற்சி கிராமப்புற பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கும் எதிர்காலத்தில் சிறந்த தொழிலாக மாறும் சூழல் உருவாகியுள்ளது..

Tags: கோவைA medicinal mushroom that grows only in the Himalayas - a breakthrough made in Coimbatoreஇமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான்மருத்துவ காளான்
Share
Tweet
SendShare
Previous Post

மனைவியை கொல்ல சதி : துபாயில் இருந்து கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்ட முயற்சி!

Next Post

நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies