AI-ஆல் வேலை காலியாகுமா? அதிக ஊதியம் கிடைக்குமா? : ZOHO ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!
Nov 15, 2025, 07:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

AI-ஆல் வேலை காலியாகுமா? அதிக ஊதியம் கிடைக்குமா? : ZOHO ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

Web Desk by Web Desk
Jun 15, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

AI வருகையால், வேலை இழப்புகள் ஏற்படும் என்ற அச்சம் மேலோங்கி வரும் நிலையில், ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, மனிதர்களால் மட்டுமே செய்யக் கூடிய வேலைகள் இன்னும் நிறைய உள்ளன என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

புரட்சிகரமான தொழில்நுட்பங்களில் ஒன்றான AI ஆதிக்கம் செலுத்தாத துறைகளே இல்லை என்று சொல்லிவிடலாம். அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் AI, வாழ்க்கையை எளிதாகவும் திறமையாகவும் பயன்படுத்த உதவியுள்ளது.

1955 ஆம் ஆண்டு ஜான் மெக்கார்த்தி என்பவரால் செயற்கை நுண்ணறிவு என்ற சொல் உருவாக்கப்பட்டது. முன்னதாக,1950 களில், ஆலன் டூரிங் போன்ற கணினி விஞ்ஞானிகள் இயந்திர கற்றல் மற்றும் அறிவார்ந்த அமைப்புகள் குறித்த தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் நவீன AI க்கு அடித்தளமிட்டனர்.

இன்று, AI மிக முக்கியமான தொழில்நுட்பமாக உருவாகியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் முதல் ஸ்மார்ட் வீடுகள் வரை,எங்குப் பார்த்தாலும் AI, வாழும், வேலை செய்யும் மற்றும் தொடர்பு கொள்ளும் விதத்தைப் புதுமையாக மாற்றி வருகிறது.

AI என்பது மனிதர்களைப் போலச் சிந்திக்கவும், கற்றுக்கொள்ளவும், செயல்படவும் திட்டமிடப்பட்ட மனித நுண்ணறிவின் உருவகமாகும். இதன் மூலம், சிக்கல் தீர்க்கும் திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் படைப்பாற்றல் போன்ற மனித நுண்ணறிவு தேவைப்படும் அனைத்து பணிகளையும் AI யால் செய்ய முடியும்.

எங்குப் பார்த்தாலும் AI- இதற்குக் காரணம் மனிதர்கள் செய்யும் வேலைகளை அதே திறமையுடன் AI செய்வது தான். அண்மையில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளின் முடிவுகள், GEN Z ஊழியர்களின் வேலைகளைச்  செயற்கை நுண்ணறிவு  பறித்துவிடும் என்று தெரிவித்துள்ளன.

AI பெரும்பாலான வகையான வேலைகளைப் பறித்துக்கொள்ளும் நிலையில் சமூகத்தில் எந்த மாதிரியான மாற்றங்கள் உருவாகும் ?   இந்த சூழ்நிலையைச் சரியாக எடைபோட்டு, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோவின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இது குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

AI பற்றி யோசிக்கும் போது, வேலைவாய்ப்பு பற்றி மட்டும் பார்க்காமல்,பொருளாதாரம் சார்ந்த பிரச்சனையாகப் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஸ்ரீதர் வேம்பு, தொழிற்சாலை ஒன்றில், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தாமல்  AI மூலம் அதிகமாக உற்பத்தியாகி சந்தைக்கு வரும் அனைத்து பொருட்களையும் எவ்வாறு  மக்கள் வாங்க முடியும்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

AI மற்றும் ரோபோகளால் தயாரிக்கப் பட்ட பொருட்களின் விலை பெருமளவில் குறையும் என்றும், சொல்லப்போனால் விலையில்லாமல் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றும் ஸ்ரீதர் வேம்பு எச்சரித்துள்ளார். மேலும், AI யால் ஒருபோதும் செய்ய முடியாத மற்ற எல்லா வேலைகளுக்கும் அதிகமான சம்பளம் கிடைக்கும் நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக, குழந்தைகளைப் பராமரித்தல், வீட்டில் சமைத்த உணவுகள், நோயாளிகளைக் கவனித்தல், விவசாயம் செய்தல், கால்நடைகளை வளர்த்தல் ஆகிய பணிகளுக்கு அதிகமான சம்பளம் கிடைக்கும் என்று விளக்கியுள்ளார்.

எனவே, AI சில வேலைகளைப் பறித்துக் கொண்டாலும், மனித உழைப்புக்கு அதிக ஊதியம் கிடைக்கும் என்பதால், வாழ்க்கையைத் தக்கவைக்கக் கொள்ள இது போதுமானதாக இருக்கும் என்று ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படையில் இது முற்றிலும் தொழில்நுட்ப பிரச்சினை அல்ல.  பொருளாதார விநியோகப் பிரச்சினையால் ஏற்படக் கூடிய அரசியல் பொருளாதாரத்தின் பிரச்சினை ஆகும்.  AI யால் உருவாக்கப்படும் பொருட்களின் விலைகள் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருப்பதை உறுதி செய்வதும், தொழில்துறையின் ஏகபோகங்களை ஒடுக்குவதும்  அரசின் முக்கிய கடமையாகும் என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

Tags: AI-ஆல் வேலை காலியாகுமாவேலை இழப்புகள்tamil janam tvWill AI make jobs vacant? Will it get higher wages? : ZOHO Sridhar Neembu explainsZOHO ஸ்ரீதர் வேம்பு விளக்கம்
ShareTweetSendShare
Previous Post

நவீன உபகரணங்களின் அணிவகுப்பு : மாற்றுத்திறனாளிகள் வியந்த கண்காட்சி!

Next Post

இஸ்ரேல் தாக்குதலில் பலத்த சேதமடைந்த எண்ணெய் கிடங்கு : உற்பத்தியை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு!

Related News

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies