இறுதி மூச்சு உள்ளவரை பாமகவின் தலைவராகத் நானே செயல்படுவேன் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தன்னுடைய மூச்சுக் காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன் என்றும் இறுதி மூச்சு உள்ளவரை பாமகவின் தலைவராக நான்தான் செயல்படுவேன் என்று ராமதாஸ் உறுதிபட தெரிவித்தார்.
குடும்பத்தினர் அரசியலுக்கு வேண்டாம் எனத் தொடக்கம் முதலே கூறினேன். அதனைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் தந்தை, தாயை மகிழ்ச்சியாக வைத்துள்ளதாக அனைவரிடமும் கூறுகிறார் அன்புமணி என்று கூறிய ராமதாஸ் செயல்தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் அதுவே எனக்கு மகிழ்ச்சி என அவர் தெரிவித்தார்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று கூறினால் அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார் என்று ராமதாஸ் கூறினார்.