மாணவர்கள் கல்வியில் அறிவாற்றலையும், விளையாட்டில் திறமையையும் வளர்த்துக்கொண்டு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பழவேளி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், கேம்பிரிட்ஜ் பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் புதிய பள்ளி கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றிய அவர், பள்ளியின் பெயர் பதித்த கல்வெட்டைத் திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்களை எப்போதும் படிக்கச் சொல்லிப் பெற்றோர் மன அழுத்தம் தரக்கூடாது எனவும், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சிறந்த கல்வியை வழங்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.