இஸ்ரேலுக்கு உதவினால் தாக்குதல் நடத்துவோம் : ஈரான் எச்சரிக்கை!
Jul 13, 2025, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இஸ்ரேலுக்கு உதவினால் தாக்குதல் நடத்துவோம் : ஈரான் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Jun 14, 2025, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலுக்கு உதவ நினைத்தால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் ராணுவ தலைமை தளபதி முகமது பகேரி, ஈரானிய புரட்சிப்படை தளபதி ஹொசைன் சலாமி, 9 அணுசக்தி விஞ்ஞானிகள் உட்படப் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரைக் குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் அயன் டோம் என்ற வான் பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. 2-வது நாளாக ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானுக்கு எதிராகப் பெரிய அளவில் படையைத் திரட்டும் பணியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் வலுக்கும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தடுத்தாலோ, அவர்களுக்கு உதவினாலோ அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கப்பல்கள் மற்றும் பிராந்திய முகாம்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே ஈரானின் பதிலடி தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், மக்கள் புகலிடம் தேடி மாற்று இடங்களுக்குச் சென்ற வண்ணம் உள்ளனர்.

அதேபோல, பாதுகாப்பு காரணங்களுக்காக அங்குள்ள பல மருத்துவமனைகளின் முக்கிய வார்டுகள், நிலத்தடி வாகன நிறுத்துமிடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. நோயாளிகளை அங்கு அழைத்துச் செல்ல ஐசியு வசதியுடன் கூடிய பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

Tags: Iran warns: We will attack if we help Israelஈரான் எச்சரிக்கைதாக்குதல்ஈரான் தலைநகர்
ShareTweetSendShare
Previous Post

கல்வியில் அறிவாற்றலையும், விளையாட்டில் திறமையையும் வளர்க்க வேண்டும் : முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

Next Post

தஞ்சாவூர் : வடிகால் வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

Related News

சீனாவின் “சைபோர்க்” தேனீ : ராணுவ உளவுப் பணிக்கு புதிய தொழில்நுட்பம்!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் – முதல் இன்னிங்சில் இந்தியா 387 ரன் குவிப்பு!

ஐரோப்பிய யூனியன் மற்றும் மெக்சிகோவுக்கு 30 % வரி – ட்ரம்ப் அறிவிப்பு!

உக்ரைனுக்கு எதிரான போர் : அமெரிக்கா இரட்டை வேடம் – ரஷ்யாவிற்கு உதவியது அம்பலம்!

சீனா : சவப்பெட்டியில் தாயை ஊர்வலமாக அழைத்துச் சென்ற மகன்!

பாகிஸ்தான் : பேருந்தை மறித்து 9 பயணிகளை சுட்டுக் கொன்ற கிளர்ச்சியாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கல் – வரத்து குறைவால் பன்னீர் திராட்சை விலை உயர்வு!

தஞ்சை அங்காள முனிஸ்வரன் கோயிலுக்கு கிரேனில் எடுத்துச்செல்லப்பட்ட 27 அடி அரிவாள்!

தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் – நயினார் நாகேந்திரன்

திராவிட மாடல் சர்க்கார் தற்போது “சாரி மா” சர்க்காராக மாறிவிட்டது – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

நீர்வரத்து குறைவு – மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்!

பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் – சாலை மறியல்!

கோட்டா ஸ்ரீனிவாசன் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து – 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு!

விக்கிரவாண்டி அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் பலி!

நெடுந்தீவு கடலில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 14 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies