மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.
மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர். அப்போது, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் ஆதித்ய சேதுபதி உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.
இதையடுத்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நயினார் நாகேந்திரன், அடையாள அட்டைகளை வழங்கினார்.