தமிழகத்தில் இனி திமுகவால் ஆட்சிக்கு வரவே முடியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெற்ற விழாவில் பேசியவர்,
முத்ரா திட்டத்தின் மூலமாகத் தமிழகத்தில் நான்கரை கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் என்றும் மத்திய அரசுத் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் ஆட்சி தமிழகத்தில் நடந்துவருகிறது என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
பாரத தேசத்தின் பன்முகத்தன்மையைக் காப்பாற்றும் சிறந்த தலைவராகப் பிரதமர் மோடி உள்ளார் என்றும் 2026 தேர்தல் திமுகவை வீட்டுக்கு அனுப்பும் தேர்தலாக இருக்கும், என்றும் தமிழகத்தில் இனி திமுகவால் ஆட்சிக்கு வரவே முடியாது என்று நயினார் நாகேந்திரன் உறுதிப்படத் தெரிவித்தார்.