தாராபுரம் அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்த தாயை மகனே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பெருமாள் வலசு கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர், மகன் ராஜகோபாலுடன் வசித்து வந்தார்.
நீண்ட நாட்களாக உடல் சரியில்லாமல் வீட்டிலேயே படுத்த படுக்கையாக மாரியம்மாள் இருந்தார். இந்த நிலையில், நோயின் கொடுமை தாங்க முடியாமல் கதறி அழுத மாரியம்மாளைக் கழுத்தை அறுத்து மகன் ராஜகோபால் கொலை செய்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மாரியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், தாயைக் கொன்று விட்டுத் தலைமறைவாக இருந்த ராஜகோபாலை போலீசார் கைது செய்தனர்.