நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கனமழை பெய்து வருவதால் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 29.2 சென்டி மீட்டர், அப்பர் பவானியில் 16.8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கனமழை காரணமாக உதகை – குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரின்ப விலாஸ் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், சாலையில் விழுந்த மரத்தினை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், 6 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.
















