மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
பனிப்பொழிவால் பாதிக்கப்படும் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், லடாக் மாநிலங்களில் முதல் கட்டமாக நடப்பாண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என்றும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது என்றும்,
கணக்கெடுப்பில் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் அதிகாரிகள் பங்கேற்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதிநவீன டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி பணியை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















