கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று காலை முதல் சபரிமலை முழுவதும் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அனைத்து காட்டாறுகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக பம்பா நதியில் இருகரைகளையும் தொட்டவாறு வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது.
இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் குளிக்க கட்டுப்பாடுகளை விதித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடைகளை பிடித்தவாறு ஐயப்பனை தரிசித்தனர்.
















