கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் 8 வயது சிறுமியை உறவினர் கொடூரமாகத் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குதிரைவட்டன் கால குலவிளை பகுதியைச் சேர்ந்த வினிஷா, தனது கணவரைப் பிரிந்து, பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். வினிஷாவை வீட்டை விட்டு வெளியேற்றும் நோக்கில், அவரது சகோதரின் மனைவி நிஷா, வினிஷாவின் மகளை கண்மூடித்தனமாகத் தாக்கி உள்ளார்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.