2025 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதினை வென்றுள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், ஒற்றைச் சிறகு ஓவியா என்ற சிறுவர் நாவலுக்காக இந்த உயரிய விருதை வென்றுள்ள திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள், கவிஞர், கட்டுரையாளர், கதை சொல்லி, சிறார் எழுத்தாளர், இதழாசிரியர் என, பல தளங்களில் முத்திரை பதித்தவர் என தெரிவித்துள்ளார்.
விஷ்ணுபுரம் சரவணன், இலக்கியத்தில் தொடர்ந்து பல படைப்புகளை மேற்கொண்டு, மென்மேலும் பல விருதுகளை வெல்ல, வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
















