காவல்துறை பதவி உயர்வு தொடர்பான அரசாணை - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Sep 17, 2026, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல்துறை பதவி உயர்வு தொடர்பான அரசாணை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 19, 2025, 10:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காவல்துறை பதவி உயர்வு தொடர்பான அரசாணைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், போதிய ஓய்வு இல்லாமலும், விடுமுறை இல்லாமலும் காவலர்கள் தவித்து வரும் நிலையில், தற்போது காவல்துறைக்கான பதவி உயர்வுக்கான காலத்தை குறைக்கிறேன் என்ற பெயரில் புதிய அரசாணை பிறப்பித்து, 2011-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான காவலர்களுக்கு சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு கிடையாது என அறிவாலயம் அரசு மேலும் வதைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவித்த காவல்துறையில் பணி உயர்வு பெறுவதற்கான தகுதி காலம் குறைக்கப்படும் எனும் தேர்தல் வாக்குறுதியை, நெடுங்காலமாக கிடப்பில் போட்டு காலந்தாழ்த்தி விட்டு தற்போது அரசாணை பிறப்பிக்க காரணம், இன்னும் ஓர் ஆண்டில் தேர்தல் வருவதனாலா? அல்லது 37,000-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் ஏமாற்றி செலவைக் குறைக்கலாம் என்ற  எண்ணமா? என்று மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட மாடல் ஆட்சியில் திசை எட்டும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கின் சுவடு தேய்ந்து வரும் நிலையில், இப்படி காவலர்களின் பணி நியமன ஆண்டை கருத்தில் கொண்டு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டினால், காவலர்களின் பணித்திறன் பாதிக்கப்பட்டு, மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

எனவே, 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு கிடைக்கும்படி அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும் என ஸ்டாலினை வலியுறுத்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: police promotions.tamilnadu policetamil nadu governmentTamil Nadu BJP state president Nainar NagendranArivalayam government
Share
Tweet
SendShare
Previous Post

பால சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies