திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தம்பதியுடன் செல்ஃபி எடுக்கும்போது நெற்றியில் வைத்திருந்த விபூதியை திருமாவளவன் அழித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் தம்பதியினர் திருமாவளவனுடன் செல்ஃபி எடுக்க முயன்றனர்.
அப்போது அவர்களிடம் செல்போனை வாங்கிய திருமாவளவன், தனது நெற்றியில் வைத்திருந்த விபூதியை அழித்துவிட்டு போஸ் கொடுத்தார். திருமாவளவனின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
















