கர்நாடகாவில் வேலைநேரத்தை 10 மணிநேரமாக உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து ஐடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐடி மற்றும் பிபிஓ துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வேலை நேரத்தை 10 மணி நேரமாகவும், அதிகபட்ச வேலைநேரத்தை ஒரு நாளைக்கு 12 மணி நேரமாகவும் அதிகரிக்க அம்மாநில அரசு திட்டம் வகுத்துள்ளது.
இது தொடர்பாக சட்ட திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடக மாநில ஐடி ஊழியர்கள் சங்கமான கே.ஐ.டி.யு. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மறுபுறம், கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு, ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, வேலை நேரத்தை 10 மணிநேரமாக அதிகரிப்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என கூறியுள்ளது. ஆனால் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.