ஈரானில் இருந்து நாடு திரும்பிய தங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ஈரான் வான்பரப்பை அந்நாடு மூடியது. இதையடுத்து ஈரானில் சிக்கிய இந்திய மாணவர்களை மீட்கும் விதமாக ஆப்ரேஷன் சிந்து நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், தெஹ்ரானிலிருந்து டெல்லி வந்தடைந்த மாணவர்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்தனர். நட்சத்திர விடுதியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
















