முருக பக்தர்கள் மாநாட்டிற்காகத் தேனி மாவட்டம் பெரியபாளையத்தில் வேலுடன் ஊர்வலமாகச் சென்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காகப் பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் பாஜகவினர் வேல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அவர்கள் வேலுடன் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.