திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிருத்திகை தினத்தை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடான பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் முருகப் பெருமானுக்கு உகந்த கிருத்திகை தினத்தை ஒட்டி அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இதையொட்டி மலைக் கோவிலில் அதிகாலையில் மூலவர் முருகப்பெருமானுக்கு இளநீர், பால், சந்தனம் போன்ற வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தங்கக் கவசம் அனுவிக்கப்பட்டது.
ஞாயிறு விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவிலிருந்தும் பக்தர்கள் மலைக்கோவிலில் திரண்டனர்.
இதனால் மலைக்கோயில் முதல் மலை அடிவாரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளதால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.