மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுத் திடலில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை எனப் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முருக பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விதத்தில் மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கத் தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். வாகன நிறுத்துமிடத்தில் பதிவெண்களைக் குறித்த பின் போலீசார் அனுமதித்து வருகின்றனர்.
இதனிடையே மாநாட்டுத் திடலில் போலீசார் போதிய பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை எனப் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வாகன நிறுத்துமிடத்தில் மட்டுமே போலீசார் கவனம் செலுத்துவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.