கட்சி அங்கீகாரம் பெறுவதற்கு ஏதுவாக சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோட்டில் மதிமுகவின் 31-வது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ உள்பட ஆயிரத்து 800 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அழைப்பாணையுடன் வந்தவர்கள் கடும் சோதனைக்கு பிறகே திருமண மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடிக்கும் என்பது உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.