கோவை கவுண்டம்பாளையத்தில் பாமக நிர்வாகி எழுதிய கதை சொல்ல போறேன் எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், மண்ணை பாதுகாக்கப் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், பொறுமைக்குத் தனது கணவர்தான் சிறந்த உதாரணம் எனவும் கூறினார்.