ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியில் இருந்து 14 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
4 நாட்களுக்கு முன்னர் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி வீதம் நீர்வரத்து வந்தது.
இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால், தற்போது நீர்வரத்து 14ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.