முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யாரும் வரமாட்டார்கள் என்ற திமுக-வின் எண்ணம் பொய்த்துப் போனதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யாரும் வரமாட்டார்கள் என்ற திமுக-வின் எண்ணம் பொய்த்துப் போனது என்றும் மாநாட்டுக்கு முன்பாகவே சுமார் 3 லட்சம் பேர் அம்மா திடலுக்கு வருகை புரிந்தனர் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
திருநீறு விவகாரத்தில் திருமாவளவன் கூறியுள்ள விளக்கம் நம்புவது போலவா உள்ளது? என கேள்வி எழுப்பியவர், போலீஸ் பாதுகாப்பு இல்லாத போதும் மாநாட்டில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை என நயினார் நாகேந்திரன் குறிப்பட்டார்.