திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கோயிலை, அறநிலையத் துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுகுடி பகுதியிலுள்ள மந்தை முத்தாலம்மன் கோயிலை அறநிலையத் துறையுடன் இணைக்க முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.