சென்னை மெரினா கடற்கரையில் ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்ட பேட்டரி வாகன நிறுத்துமிடத்திற்கு மாநகராட்சி சார்பில் மீண்டும் டெண்டர் வெளியிடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காகக் கடந்த 11 ஆம் தேதி பேட்டரி வாகன சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த பேட்டரி வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காக அங்குள்ள நீச்சல் குளம் அருகே வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டில் உள்ளது.
ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்திற்கு 8.3 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மீண்டும் டெண்டர் கோரி மாநகராட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனையறிந்த சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கக்கூடிய வாகன நிறுத்துமிடத்திற்கு மீண்டும் எதற்காக டெண்டர் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
















