சென்னையில் வருவாய்த்துறையை சிறப்புத் துறையாக அறிவித்து தலைமை செயலக ஊழியர்களுக்கு இணையான சிறப்பு ஊதியம் வழங்கக்கோரி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை எழிலகத்தில் கிராம நிர்வாக உதவியாளர் சங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் அடங்கிய வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திர குமார் பெடரா, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாகவும், ஒருமாத காலத்திற்குள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் முற்றுகை போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தார்.